பூர்வீக நிலங்களைக் கோரி மயிலிட்டி மக்கள் 17 ஆவது வாரமாகத் தொடரும் நில மீட்புப் போராட்டம்!
Friday, August 14th, 2026
…..
வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நில மீட்புப் போராட்டம் இன்றுடன் 17 ஆவது வாரத்தினை எட்டியுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம் பெயர்ந்த இப்பகுதி மக்கள், பல தசாப்தங்களாகத் தங்களது சொந்த நிலங்களை இழந்து இன்னமும் அகதி வாழ்வை வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் பிடியில் உள்ள தமது பூர்வீக நிலங்கள் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயமாகவே தொடர்வதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்நிலையிக் மயிலிட்டிப் பகுதியில் உள்ள தங்களது குடியிருப்பு நிலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்களை மீட்டுத் தருமாறு கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்ட வடிவங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, காங்கேசன்துறை – பொன்னாலை வீதியில் அமைந்துள்ள பங்களா இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் ஒன்றுகூடும் மக்கள், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், துறைசார் அதிகாரிகளும் அரசாங்கமும் தங்களது நீண்ட கால இன்னல்களுக்குச் செவிமடுத்து, பூர்வீக நிலங்களை மீட்டுத் தந்து தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தேசளாவிய மற்றும் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106