விசா செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு – குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, October 7th, 2021

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று 7 ஆம் திகதிமுதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றுமுதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதிமுதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்படமாட்டதெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போதியளவு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் - மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாத...
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக...