பைஸர் தடுப்பூசியினை தவிர ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்ச்ர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Monday, October 11th, 2021
நாட்டிற்கு தேவையான பைஸர் தடுப்பூசியினை தவிர, ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு விரைவில் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பிலான தவறான புரிதலே இதற்கான பிரதான காரணமாகும்.
இதேநேரம் சைனோபாஃம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மறுவாழ்வு அதிகார சபையின் இழப்பீட்டுக் கொடுப்பனவு மறுவாழ்வு அமைச்சின் ஊடாகவே வழங்கப்படும் - யாழ்.மாவ...
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு ஒத்திவைப்பு!
வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் - அரச உத்தியோகத்தர்...
|
|
|


