2,532 பரீட்சை மையங்கள் – 372,310 பரீட்சார்த்திகள் –  A/L பரீட்சை ஆரம்பம் !

Monday, August 10th, 2026


….
2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி, செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த முறை உயர்தரப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இதில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

பரீட்சைகளை எவ்வித தடையுமின்றி நடத்துவதற்குத் தேவையான பரீட்சை மையங்கள், மேற்பார்வை ஊழியர்கள் மற்றும் ஏனைய தளபாட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் தேவையான வசதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106