விஜய்க்கு எதிரான விவாகரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா!

Friday, August 7th, 2026



தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது.
பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. 

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106