சிறைக் கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை!
Friday, August 7th, 2026
……
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்புத் தொடர்பாக மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்தும் ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் உரிய வகையில், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையொன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106