மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்  –  டுபாயில் இம்மாதம் ஆரம்பம்!.

Friday, August 7th, 2026

8 அணிகளுக்கு இடையிலான 10வது மகளிர் ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .

‘A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்,ஹொங்கொங், தாய்லாந்து அணிகளும், ‘B’ பிரிவில் நடப்பு சம்பியன் இலங்கை, பங்களாதேஷ் , இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் Top -2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

7 முறை சம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 30ஆம் திகதி தாய்லாந்துடன் மோதுகிறது.

செப்டம்பர் 3ஆம் திகதி ஹொங்கொங்கையும், 5ஆம் திகதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது .
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106