மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் – இலங்கைக்கு இந்தியா கடும் அழுத்தம்!
Thursday, August 6th, 2026
…..
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை அரசாங்கத்திடம் தீவிர கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனுடன், இருதரப்பு வர்த்தகம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பம், வர்த்தகம், எரிசக்தி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விடயங்கள் மட்டுமே பேசப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு விடயமும் அந்த அறிக்கையில் இடம்பெறாமை தற்போது பெரும் அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்திருந்த நிலையில், இந்தியாவின் இந்த அழுத்தம் மீண்டும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106