பிரமிட் திட்டத்தை ஊக்குவித்த “TM App” – தடைப் படியலில் இணைத்தது மத்திய வங்கி!
Wednesday, August 5th, 2026
….
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறு) 83(C) பிரிவின் கீழ், “TM App” என்ற செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நடத்தியுள்ளதாகவும், அதில் ஈடுபட்டு அதை ஊக்குவித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொது அறிவிப்பில், தமது விசாரணைகளின் மூலம் “TM App” ஒரு தடைசெய்யப்பட்ட திட்டமாகச் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் இந்தச் செயலியும் சேர்க்கப்பட்டுள்ளது.
000
Related posts:
மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் மேலதிக செலவு– மின்சக்தி அமைச்சு!
அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்படவில்லை - நிதி அமைச்சு!
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
|
|
|


