தமிழ்நாடு அரசின் புதிய பாதீடு இன்று சமர்ப்பிப்பு!
Wednesday, August 5th, 2026
தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கை இன்று (05) தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சனால் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
முற்பகல் 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தமிழக மக்கள் தனக்கு வழங்கிய ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி செலுத்தும் நோக்கிலேயே முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம்; ஆனால் அவர்கள் செய்யும் செயல்களே அவர்களின் சிறப்பை தீர்மானிக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.
நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் முதலமைச்சர் விஜய், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், காலை 10 மணிக்கு முன்பாகவே சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.
வழக்கமாக சட்டமன்ற நிகழ்வுகளில் அணிந்து வரும் கறுப்பு பிளேஸர் மற்றும் கோட்–சூட்டுக்குப் பதிலாக, இன்று எளிமையான தோற்றத்தில் பேண்ட்–ஷர்ட் அணிந்து அவர் காணப்பட்டார். சில்வர் ப்ளூ நிற சட்டையுடன், அவர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இருந்த சபாநாயகர் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106