மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
Sunday, February 24th, 2019
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புதிய முறையில் நடத்துவதற்குள்ள பிரச்சினைகள் மற்றும் பழைய முறையில் விரைவில் நடத்துவதற்கான இயலுமை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்துக் கொள்வதற்கான இணக்கபாடு கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள்...
மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பம் - இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்ப...
|
|
|
சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க...
25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது - சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில கு...
சமாதான ஒப்பந்தங்கள் யுக்ரேனை சரணடைய வைக்கும் செயற்பாடாக இருக்கக்கூடாது - இம்மானுவேல் மெக்ரோன்!


