இந்திய வெளியுறவு செயலாளர்  உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

Tuesday, August 4th, 2026


…
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விஜயத்தின் போது அவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்  விக்ரம் மிஸ்ரியை சந்திப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, எதிர்வரும் செவ்வாயன்று மேற்படி 6 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது இதுபற்றியும் கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106