40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!

Monday, August 3rd, 2026


​…
தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (ஆகஸ்ட் 2) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
​வசாவிளான் சந்தியில் முற்பகல் ஆரம்பமான இப்போராட்டமானது, வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கடந்த 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்ந்துவரும் மக்கள், தங்களின் நீண்டகால வலிகளைச் சுமந்தவாறு இப்போராட்டத்தில் பேரளவில் திரண்டு கலந்துகொண்டனர்.

​”அரசே! எமது குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள் மற்றும் கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு” என்ற வலுவான கோரிக்கையை முன்வைத்து மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
​இப்போராட்டத்தில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
​இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள்,

“விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்குக் கிடைக்கப்பெற வேண்டும்”

​என்ற கோசங்களை எழுப்பினர். மேலும், கடந்த காலங்களில் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை தற்போதைய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியே தாம் போராடுகிறோமே தவிர, எவருக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106