தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் – டக்ளஸ் குற்றச்சாட்டு!.

Friday, July 31st, 2026

தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேசானந்தா குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நாம்.
சரியாக பயன்படுத்தாமையினால்.
தமிழர்களின் விடுதலை பயணம்.
39 ஆண்டுகாலம் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

1987.7.29ஆம் திகதி கைச்சாத்தாகிய இந்த ஒப்பந்தத்தை ஓர் ஆரம்பமாகக் கொண்டு நாம் நடைமுறைப்படுத்தியிருந்தால்,
தமிழர்களின் விடுதலை அரசியல் பயணத்திற்கு வழி பிறந்திருக்கும்.

இந்த 13 ஆம் திருத்தத்திலிருந்து முன்னேறி நாம் இன்று.
இறுதி இலக்கை அடைந்திருக்க முடியும்.

13ஆம் திருத்தத்தை ஓர் ஆரம்பமாக ஏற்க மறுத்ததன் விளைவு, சொல்லொனா துன்பங்களுக்கு தமிழ் மக்களை இட்டுச் சென்றது மட்டுமல்ல,
தமிழர்களின் விடுதலை பயணத்தையே இன்று சிதைத்து நிற்கின்றது.

13ஆம் திருத்தத்தை ஏற்றிருந்தால், தமிழர்களின் உரிமை அரசியல் இன்று எந்தவித இழப்பும் இன்றி முன்னோக்கி நகர்ந்திருக்கும்.

தமிழர் தாயகமான, வரலாற்று நிலமான வடக்கையும் கிழக்கையும் இணைத்தததாக இன்று முன்னோக்கி பயணித்திருக்க முடியும்.

எமது நிலம் எந்தவித ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகாதவாறு பாதுகாத்து பயணித்திருக்க முடியும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறைச்சாத்தியமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை ஓர் ஆரம்பமாக ஏற்றிருந்தால,; இன்று எந்தவிதமான தடைகளுமின்றி நடைமுறையில். சுயாட்சியை தமிழ் மக்கள் அடைந்திருக்க முடியும்.

நாம் அன்று முதல் இன்று வரையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஒரு பொன்னான வாய்ப்பு என்று குறிப்படுவது, அது வெறுமனே கிடைத்த ஒன்றல்ல, மாறாக, எமது உரிமைப் போராட்டம் பெற்ற வெற்றியாகும்.

தமிழ் மக்கள் பெற்ற வெற்றியை தமிழ் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வேதனையாக இருக்கின்றது.

இனிவரும் காலங்களில் அது நடைமுறைச்சாத்தியமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

பொதுத் தேர்தல் முடிந்த கையுடன் மாகாண சபைத் தேர்தலையும் உள்;ராட்சி சபைகளின் தேர்தலுக்கு முன்பாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும்.

கடந்த காலத்தில் நாம் அரசாங்கத்தை வலியுறுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தோம். ஆனாலும், அது சரியானவர்களது கரங்களில் கிடைக்காமல் போனதால், மக்களுக்கு அது ஏமாற்றத்தையே அளித்தது.

இனிமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வரும்போது, அதை மிகச் சரியாகப் பயன்படுத்த எமது மக்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்;;கிறேன். நிச்சயமாக, அப்;போதுதான் எமது மக்கள் பயனடைவார்கள்.

எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106