ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கலந்துரையாடல்!
Wednesday, July 29th, 2026
…..
நெடுந்தீவு பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வை முன்னிறுத்தி, கட்சியின் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தே இந்த முன்னாயத்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதில் உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் வட்டார கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் முகமாக, வட்டார வாரியான நிர்வாக அலகுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக மக்களுடன் இணைந்து செயற்பட்டு, அவர்களின் அடிப்படையான மற்றும் அவசியமான தேவைகளை இனங்கண்டு தீர்வுகாணும் வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதேநேரம் இனங்காணப்பட்ட மக்கள் தேவைகளை, உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமிடல்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதே நேரம் நெடுந்தீவு பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து, அவற்றுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குவதே கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ககின் பிரதான கடமையாகும் என இதன்போது மாவட்ட நிர்வாக செயலாளரால் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக நெடுந்தீவு மக்கள் அண்மைய காலத்தில் எதிர்கொள்ளும் போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும், அவற்றை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாகவும் உறுப்பினர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற ரீதியில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன்களுக்காக தொடர்ச்சியாக உழைக்க வேண்டும் எனவும், நிர்வாகக் கட்டமைப்பை மேலும் மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106