டெங்கு தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிப்பு – 81 ஆயிரம் பேர் அடையாளம்!
Monday, July 27th, 2026
……
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 61 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (26) வரையிலான தரவுகளின்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
மேலும், மாத்தறை, கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 26,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நள்ளிரவு நிலவரப்படியான சராசரி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2,300 ஐத் தாண்டியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதனால், நுளம்பு பெருகும் இடங்களை அழித்தல், சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106