இணையம் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற நடவடிக்கை!
Monday, January 27th, 2020
சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்றுமுதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகபயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சேவை கடந்த வெள்ளிக்கிழமை வரை பரிசோதனை மட்டத்தில் காணப்பட்டது. எனினும் இன்றுமுதல் www.ntmi.lk என்ற இணையத்தளம் ஊடாக சாரதி அனுமதிபத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான தினம் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக 1200 கோடி!
வாகன இலக்கத்தகடுகளை 31 ஆம் திகதிக்கு முன் பொறுப்பேற்கவும் - யாழ்.போக்குவரத்து திணைக்களம் !
தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்காள்ள சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்துவது அவசியம் – வாடிக்கை...
|
|
|


