வலிதெற்கு பிரதேச ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, July 26th, 2026


வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேசத்தில்  கடசியின் செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து அதிகரித்து வருகின்றமையை சுட்டிக்காட்டிய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்திற்காக வட்டாரக் குழுக்களை மறுசீரமைத்து கிராமங்கள் தோறும் கட்சிச் செயற்பாடுகள் வீரியமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உடுவில் பிரதேச  முக்கியஸ்தர்களான வலன்ரயன் – சந்திரன், தனுஜா ஆகியோரது பிரசன்னத்துடன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தின் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் குறித்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: