சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் – சச்சினின் முறியடித்த வைபவ் சூரியவன்ஷி!

Friday, July 24th, 2026

இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் பெற்ற சாதனையை இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.

வைபவ் சூரியவன்ஷி சர்வதேச 20க்கு20 போட்டியில் தமது முதல் அரை சதத்தை பெற்றதன் மூலம் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

ஸிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று ஹராரேயில் நடைபெற்ற முதல் 20க்கு20 போட்டியிலேயே அவர் அரை சதத்தை பெற்றுள்ளார்.

18 பந்துகளில் அவர் 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் 19வது பந்தில் ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னதாக சர்வதேச போட்டி ஒன்றில் இளவயதில் அரை சதத்தை பெற்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் கொண்டிருந்தார்.

அவர் 1989 ஆம் ஆண்டில் 16 வயதாக இருக்கும்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது சர்வதேச முதல் அரை சதத்தை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், 15 வயதான சூரியவன்ஷி சச்சினின் சாதனையை சர்வதேச அளவில் முறியடித்துள்ளார்.

முன்னதாக இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106