சங்கானை பிரதேச செயலகம் கோரிக்கை – நிராகரித்தது வலி மேற்கு பிரதேச சபை!
Thursday, July 23rd, 2026
……
சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம்,மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிராகரித்துள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் குறித்த விடையம் தொடர்பான கோரிக்கை ஒன்றை பிரதேச செயலகம் விடுத்துள்ளதாக தவிசாளர் ஜயந்தனால் பிரஸ்தாபிக்கப்பட்டு அது தொடர்பாக சபை உறுப்பினர்கள் கருத்தை கோரியிருந்தார்.
இதன்போது குறித்த பேருந்து நிலைய வளாகம் வலி மேற்கு பிரதேச சபையின் ஆதனமாக இருப்பதனால் அவ்வளாகத்தினுள் பேருந்து நிலையத்துடன் அம்மாச்சி உணவகமும் இயங்கி வருகின்றன.
இதே நேரம் ஆலயம் ஒன்றும் இவ்வளாகத்துக்குள் இருக்கும் நிலையல் பிரதேச செயலகத்திற்குச் செல்வதற்கான ஒரு வாயிலும் இருக்கின்றது.
மறுபுறம் முச்சக்கர வண்டி தரிப்பிடமும் இருக்கும் நிலையில் பிரதேச செயலகம் தமது சேவை பெறுநர் வருகைக்கான ஒரு வீதி அமைக்கவும் வரும் சிறு வாகனங்களை தரித்து நிறுத்துவதற்குமான கொட்டகை ஒன்றும் அமைப்பதற்கான அனுமதியை பிரதேச சபையிடம் கோரியுள்ளது.
ஆனால் குறித்த நிலப்பரப்பில் பிரதேச சபை, தூர நோக்குள்ள மக்கள் நலன்சார் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனிலை ஒருபுறமிருக்க ஆலயத்தின் முன் பகுதியாகவும் குறித்த இடம் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சபையின் ஆளுகை இந்த கையளிப்பூடாக எதிர்காலத்தில் இல்லாது போகும் நிலை வருவதற்கான ஏது நிலை இருக்கின்றது என பல விடையங்களை சுட்டிக்காட்டிய உறுப்பினர் செல்வக்குமார் சபைக்குரிய ஆதனமாக இருக்கும் ஒன்றை இன்னொரு அரச நிறுவனத்தின் வாகன தரிப்பிடத்திற்காக வழங்குவதையோ அவ் நிறுவனத்துக்குச் செல்வதற்கான வீதியை அமைப்பதற்கான அனுமதியையோ வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.
மறுபுறம் குறித்த சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்,இரு நிறுவங்கள மக்களுக்கான சேவை வழங்கும் ஒன்றாக இருக்கும் நிலையில் போக்குவரத்தை முன்னெடுக்கும் வீதியை அமைக்க இணக்கப்பாடு செய்ய முடியும் என்றும் அதுவும் எழுத்து மூலமாக அல்லாமல் ஒரு சமரச இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் மேலும் பல சபையின் உறுப்பினர்கள் குறித்த நிலப்பரப்பை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியாது என்றும் தற்போது நடைமுறையில் எவ்வாறு இருக்கின்றதோ அதன்பிரகாரம் தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது என்றும் வலியுறுத்தினர்.
இன்னிலையில் சபையின் உறுப்பினர்கள் குறித்த விடையத்திற்கு அனுமதியளிக்க விரும்பாமையால் தொடர்ந்தும் தற்போதுள்ள நடைமுறையின் அடிப்படையில் குறித்த செயற்பாடுகள் தொடரும் என சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106