ஆவண சீர்ப்படுத்தலுக்கு சட்ட ஏற்பாடுகளை வழங்க சேவை பெறுநரிடம் கட்டணம் அறவீடு – வலி மேற்கில் தீர்மானம்!

Thursday, July 23rd, 2026
https://we.tl/t-JbbR326orvjOSw23


….
வலி மேற்கு பிரதேச சபையினூடாக வழங்கப்படும் பெயர்மாற்றம் சார் சட்ட ஆலோசனைகளுக்கும் கட்டுமாணம் சார் ஆவண சீர்ப்படுத்தலுக்குமான சட்ட ஏற்பாடுகளைப் பெற இனிவருங் காலங்களில் தேவைகருதி விண்ணப்பிக்கும் தரப்பினரிடமிருந்து கட்டணம் அறவிடுவதற்கு வலி மேற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

வலி மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (23) தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த அமர்வின்போது சபையின் உறுப்பினரான திருமதி துவாரகா ஜெயகாந்தனால் சபையின் ஆளுகைக்குட்பட்ட உப அலுவலகங்களில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி உரிமம் சார் ஆவணங்களுக்கான அனுமதிக்கு சட்டம் சார் தேவைகருதி அறவிடப்படும் கட்டணத்தில் உப அலுவலகங்களில் முரண்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பாக நான்கு உப அலுவலகங்களைக் கொண்ட வலிமேற்கு பிரதேச சபையில் ஏனைய மூன்று உப அலுவலகங்களில் ஒரே நடைமுறை இருக்க,   நடைமுறைக்கு மாறாக சங்கானை உப அலுவலகத்தில் மட்டும் சட்ட ஆலானைக்கு சேவைகருதி வருநரிடம் ஓர் ஆவணத்தை சீர் செய்து கொடுக்க 3 ஆயிரம் ரூபா சட்ட ஆலோசனை வழங்குநர் அறவிடுவதாகவும் இந்த நிதி அறவீடு சபையின் ஒப்பந்தம் மற்றும்  நிபந்தனைக்கு மாறாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அனைத்து உப அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான அறவீடு அல்லது நடைமுறை இருப்பதே முறைகேடுகளையும் தேவையற்ற குழப்பங்களையும் உருவாக்காது சபையின் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் இவ்வாறான முரண்பட்ட கட்டண சசூலிப்புக்கு ஒரு பொறிமுறையை கொண்டுவந்து நடைமுறைப்படுத்த பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

குறித்த விடையம் சபையின் விவாதப்பிருளாக மாறிய நிலையில் உறுப்பினர்கள் பல்வேறு வியாக்கியானங்களை பிரஸ்தாபித்த நிலையில்
தவிசாளர் குறித்த சட்ட ஏற்பாடுகள் சட்ட வரையறையுடன் சபையினூடாக பகிரங்கமாக கேள்வி கோரலுக்குட்படுத்தப்பட்டு பல சட்டத்தரணிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த சேவைக்கட்டணம் பெறும் சட்டத்தரணிகள் அதற்கான பொறுப்பில் சபையால் நியமிக்கப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஆசண சீராக்கலுக்கு 3 ஆயிரம் ரூபா அறவிடப்படுகின்றது. இது அனைத்து உப அலுவலகங்களுகும் பொருந்தும்.

ஆனால் சங்கானையில் இவ்வாறு நடைபெறுமாயின் அது அசதானத்தில் கொள்ளப்பட வேண்டுய ஒன்றாகும்.

எனவே இவ்வாறான  மாறுபட்ட கட்டண அறவீடுகள் மற்றும் குழப்பங்களை இல்லாது செய்ய சபையால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதனடிப்படையில் சபையின் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு இணங்க சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உப அலுசலகங்கள் ஊடாக சட்டம் சார் தேவைகருதி வருநரிடம் ஆவணமொன்றிற்கு 3 ஆயிரம் அறவிட தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106