கைதி தற்கொலையை அடுத்து இறுக்கமான நடவடிக்கை!
Wednesday, September 21st, 2016
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை குறித்த இடைவெளிகளில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயப்படுத்தப்படவுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாககூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன,
பொலிஸ் காவலில் உள்ள கைதிகள் அரை மணித்தியாலங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும் நடவடிக்கை இடம்பெற்றிருக்குமாக இருந்தால் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் இளைஞரின்மரணம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர...
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்க...
கோலாகலமாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!
|
|
|
தமிழ் மக்கள் நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் : பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோ...
நிதி இராஜாங்க அமைச்சர் நாளை யாழ். பல்கலைக்கு விஜயம் – துறைசார் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலுக்கு...
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ஜீவன் நாடாளுமன்றில் தெளிவுபடுத்தல் - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரச்ச...


