இளைஞர் யுவதிகள் காணாமல் போனமைக்கான சூத்திரதாரிகள் யார்? – ஊடக சந்திப்பில் டக்ளஸ்!

Friday, July 17th, 2026


…..
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களுக்கான உறவினர்களை ஒருங்கிணைத்து முதன்முதலாக சங்கம் அமைத்தது ஈ.பி.டி.பி.யே என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, எமது குறித்த அழுத்தம் காரணமாகவே  இளைஞர் யுவதிகள் காணாமல் போவது கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இளைஞர் யுவதிகள் காணாமல் போனமைக்கான சூத்திரதாரிகள் யார் என்பதை கிருஷாந்தி கொலைக் குற்றவாளியான முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ள போதிலும், சில தரப்புக்கள் அரசியல் நோக்கங்களுக்காக தொடர்ந்தும் ஈ.பி.டி.பி. மீது பழிசுமத்தி வருகின்றன.” என்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள் உள்வந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர்

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நாமே முதலில் தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பியும் காணாமல் ஆக்கப்பட்டார். அதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எப்படியானது என எனக்கும் நன்கு தெரியும்.

இதேவேளை யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம்.

கடுமையான சூழலாக இருந்தபோதும் அவ்வேளை காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார் 600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.

சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத புலிகள் பின்நாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள் மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
000

Related posts:

குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு - யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தே...
முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளைஅதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் - வாகன இறக்குமதியாளர...

எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இது – அமைச்சர் டக்...
“கந்தர” துறைமுக நிர்மாணப் பணிகள் இவ் வருடம் நிறைவு செயய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் - தே...