“கந்தர” துறைமுக நிர்மாணப் பணிகள் இவ் வருடம் நிறைவு செயய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 2nd, 2024

தென் மாகணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிகப் பெரிய கடற்றொழில் துறைமுகமான கந்தர துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் இவ்வருடம் பூர்த்தி செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி தென் மாகாணத்திலுள்ள கடற்றொழில் துறைமுகங்களிள் குறைநிறைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதற்காக அப் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கந்தர கடற்றொழில் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டன. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்று காரணமாக துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தாமதமடைந்த போதும் தற்போதைய ஜனாதபதியின் ஆட்சியில் பொருளாதார மறுமலச்சி ஏற்பட்டுள்ளதால் இத் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் நிவைறவடைந்து விட்டன. முதல் கட்ட அபவிருத்திப் பணிகள் இரண்டொரு மாதங்களில் பூரத்தியடைந்து விடுமென்பதால் அதன் பின்னர் கடற்றொழிலாளர்கள் தமது அன்றாட கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இக் கடற்றொழில் துறைமுகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இவ் விஜயத்தில் இணைந்து கொண்ட முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேக்கர உரையாற்றுகையில்,

இத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் வோனந்தா மற்றும் நிதி  அமைச்சுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இவ் விஜயத்தின் போது நில்வெல்ல, சுதுவெல்ல, காலி உள்ளிட்ட கடற்றொழில் துறைமுகங்களுக்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஆலேசனைகளை அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்கிரமசிங்க, இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிட்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106