காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம் -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 15th, 2026


…
காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை
​”இது ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத பிரச்சினையாக இருக்கின்றது.

குறித்த விடையம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர சபைக்கு முன்னால் தங்களது பிரச்சினை தொடர்பில் அடையாள எதிர்பைக் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக எனக்கும் அது தொடர்பில் ஒரு மகஜர் தந்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் அரசியல், அபிவிருத்தி சார் விடையங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தவன் என்ற வரலாற்று அனுபவத்தினூடாக  சில விடையங்களை கூறுகின்றேன்.

அதாவது இந்த விடையம் நீண்டகாலமாக தொடர் பிரச்சினையாக இருப்பதால் மாநகரசபை  இது தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாநகர சபை நிர்வாகம் ஆகியோருடன்  கதைத்து, இதற்கு விரைவில தீர்வு காண்பதற்கு முயற்சிக்க முடியும்.

குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றார்கள்.

​இதேவேளை நான் இப்பொழுது ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என்னுடைய அனுபவங்கள் ஊடாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வை காண்பதுதான் சரியாக இருக்கும்  என்று நான் நினைக்கின்றேன் என்றார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106