சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதி வழங்குநருக்கு விசேட உதவித்திட்டம் – 12 ஆம் திகதிக்கு முன் நெடுந்தீவு பிரதேச சபைய நாடுமாறு அறிவுறுத்து!
Tuesday, July 7th, 2026
….
நெடுந்தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதி வழங்கல் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் மற்றும் புதிதாக சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதி வழங்கல் தொழிலினை ஆரம்பிக்க இருப்பவர்களுக்கான மேம்படுத்தல் உதவி வழங்கல் மற்றும் இலகு கடன் வசதியை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .
சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதி வழங்கும் தொழிலினை மேற்கொள்வோருக்கு நேற்றையதினம் (06.07) நெடுந்தீவு பிரதேச சபையில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதி வழங்கும் தொழிலினை நடாத்திக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் எதிர்வரும் 12.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் நெடுந்தீவு பிரதேச சபையில் தங்கள் விபரங்களைப் பதிவு செய்யுமாறு பிரதேச சபையின் செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பணியகத்தினரால் தொழிலின் தற்போதைய நிலமை தொடர்பாக நேரடியாக களஆய்வு செய்யப்பட்டே உதவி வழங்கல் மற்றும் இலகு கடன் வசதியை வழங்கும் வேலைத்திட்டத்திற்குள் பயனாளர்கள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106