பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தினால் வீட்டிலேயே சோதிக்கலாமாம் – அரசின் புதிய திட்டம்!
Friday, July 3rd, 2026
…..
நாட்டை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் விவகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கம் புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் சோதித்துப் பார்ப்பதற்கான ‘போதைப்பொருள் பரிசோதனை உபகரணங்களை’ (Drug test kits) சந்தைக்கு அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
இந்த உபகரணங்கள் மருந்தகங்கள் (Pharmacies) மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘ரட்டம எகட்ட’ (நாடாக ஒன்றாக) தேசிய செயல்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய அளவிலான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தவும், விழிப்புணர்வுத் திட்டங்களை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர்களில் சுமார் 70% பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழித்தல், தடயவியல் சோதனைகளை மேம்படுத்துதல் மற்றும் கடல்வழி போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தவுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106