சீர்திருத்தத்தை உடன் தொடங்குங்கள் – இலங்கையை வலியுறுத்தும்!.…

Wednesday, July 1st, 2026


ஆளுகை மற்றும் பணவியல் கொள்கையில் மேம்பாடுகள் உள்ளிட்ட தற்போதைய சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடருமாறு, சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்கத்தையும் இலங்கை அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாப்பஜார்ஜியோ(Evan Papageorgiou), நாட்டின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு சீர்திருத்த வேகத்தைத் தக்கவைப்பது இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.

வெளிப்புற அதிர்ச்சிகள் தொடர்ந்து ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், இலங்கையின் முன்னுரிமை பொருளாதார சீர்திருத்தங்களைத் தக்கவைப்பதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் பொருத்தமானவை என்று கூறிய பாபஜார்ஜியோ, இனிவரும் காலங்களில் சீர்திருத்த செயல்முறைக்குத் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் ஏழாவது மறுஆய்வு தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

எட்டாவது மற்றும் இறுதி மறுஆய்வு, தற்போதைய திட்டம் முடிவடையும் மார்ச் 2027-க்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் இடைக்காலப் பயணத்தின் போது பல விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழான முன்னேற்றம் வரவிருக்கும் ஏழாவது ஆய்வின் போது முறைப்படி மதிப்பிடப்படும் என்றும் பாபஜார்ஜியோ கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இலங்கை அதிகாரிகள் சரியான நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பேரியல் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவியுள்ளன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி மற்றும் வெளிநாட்டு நிலைத்தன்மையைப் பேணுதல், மீள்திறனை வலுப்படுத்துதல், மற்றும் வலுவான, நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைதல் ஆகியவற்றுடன், வெளிப்புற அதிர்ச்சிகளைச் சமாளிப்பதற்கும் சீர்திருத்த வேகத்தைத் தக்கவைப்பது இன்றியமையாததாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106