நெடுந்தீவு “தேவானந்தா” கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாம்!
Saturday, June 20th, 2026
….
நெடுந்தீவு மக்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் யாழ் மருத்துவ சங்கம், மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் என்பவற்றுடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச சபை நடத்திய மருத்துவ முகாம் இன்று (20/06) சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச சபையின் “தேவானந்தா” கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற மருத்துவ முகாமில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துள்ளமை சிறப்பாகும் அத்துடன் நிகழ்வின் நிறைவில் மருத்துவர்களின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
நெடுந்தீவு மக்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் புலம்பெயர் நெடுந்தீவு உறவுகளின் அனுசரணையுடன் இம் மருத்துவ முகாம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸாரின் சீருடையில் அதிரடி மாற்றம் – ஜனாதிபதி!
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|
|


