நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது – JVP ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர!

Friday, June 19th, 2026


……
நாட்டை இரண்டாகப் பிளப்பதற்காக புலம்பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என இரண்டாம் தலைமுறை, அமைப்பின் உருப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத்தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனுமான உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியின் ‘பலய’ (Balaya) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புலம்பெயர் சமூகம், சர்வதேச சமூகம் மற்றும் பல்வேறு தரப்பினரின் தலையீட்டுடன், தற்போதைய அரசாங்கத்தைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சாடினார்.

“டொக்யார்ட் (Dockyard) இந்தியாவுக்குச் செல்லப் போகிறது. ஏனைய விடயங்கள் மற்றவர்களுக்குச் செல்லப் போகின்றன. எனவே, யுத்தம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டை இரண்டாகப் பிளக்கும் இந்த நடவடிக்கை நமக்குத் தெரியாமல் மற்றொரு பக்கத்தால் மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது,” என அவர் மேலும் கூறினார்.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106