நெடுந்தீவில் காணாமற் போனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
Friday, June 19th, 2026
நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சடலம் இன்று (19/06) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அடையாளம் கண்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும், நெடுந்தீவு தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட 41 வயதுடைய ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் (சதீஸ்) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே கடந்த 11/06 இல் நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்
இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106