மக்களின் நலன்களுக்கு மாறான செயற்பாடுகளை பிரதேச சபை அமர்வுகளில் ஏற்றுக்கொள்ள முடியாது – ஈ.பி.டி.பி வட்டார உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Thursday, June 18th, 2026


…….
வலி வடக்கு மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக அரசியல் நோக்கங்களுடனோ அல்லது தனிநபர்களின் நிழச்சி நிலரலின் அடிப்படையிலோ, பிரதேச சபையின் செயற்பாடுகள் அமையுமாயின், அதற்கு எதிராக காத்திரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி (நாளை) நடைபெறவுள்ள வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்
விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச கலந்துரையாடல் நேற்ற நடைபெற்ற நிலையிலேயே குறித்த விடயம் கட்சி செயற்பாட்டாளர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் தோழர் ஜீவன் (சிவகுரு பாலகிருஸ்ன}; தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், கடந்த மாதக் கூட்ட அறிக்கை, அடுத்த அமர்வினில் கொண்டு வரப்பட இருக்கின்ற முன்மொழிவுகள், மற்றும் கட்சியினால் வட்டார ரீதியாக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் போன்றன ஆராயப்பட்டன.

வலி.வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வட்டாரங்களின் நிர்வாகச் செயலாளர்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலின்போது, கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி., முன்னாள் வடக்கு மாகாணசபை எதிர்சக்கட்சித் தலைவர் தோழர் கமல், மற்றும் ஊடகச் செயலாளர் தோழர் ப.ஸ்ரீகாந் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106