NPP அரசின் உறுப்பினர் பொய்யான பரப்புரை –  ரணகளமான வேலணை பிரதேச சபை அமர்வு!

Wednesday, June 17th, 2026


…..
இன்றைய ஆட்சியாளர்கள், தாங்கள் ஆட்சியைப் பிடிக்க கூறிய கற்பனைக்கெட்டாத நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை மறைக்க, கடந்தகால அரசுகள் முன்னெடுத்து இறுதிக் கட்டங்களில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் தாங்கள் முன்னெடுத்தது போன்று கூறி மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றது என வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வேலணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விவாதம் நடைபெற்றபோது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லோகேந்திரன் இதயதீபன்
அண்மையில் திறந்துவைக்கப்பட்ட துறையூர் ஐஸ் தொழிற்சாலைக்கு தவிசாளர் அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு வேலணை பிரதேசத்தின் அதிகாரம் மிக்கவர் தவிசாளர் தான் அவருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்காது ஏதோ பத்துடன் பதினொன்றாக சாட்டுக்கு இப்பதுபோன்று
அழைப்பதும் இதில் தவிசாளர் கலந்துகொள்வது அசசியமற்றது என்றும் உறுனர்கள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர் இதையதீபன் கடந்த கால அரசுகள் மற்றும் பிரதேச சபையின் ஆட்சியில் இருந்தவர்கள் வேலணையில் எந்தவொரு அபிவிருத்தியையும்  முன்னெடுக்காதிருந்த நிலையில் தமது NPP அரசுதான் அதிகளவான அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளதாகவும் குறிப்பாக பல உள்ளக வீதிகள், தாளையடி குடிநீர் திட்டம், துறையூர் ஐஸ் தொழிற்சாலை உள்ளிட்ட பெயர் சொல்லும் சேவைகளை செய்ததாகவும் சுட்டிக்காட்டி உரையாற்றிய நிலையில் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்  குறுக்கிட்டு இதயதீபன் சுட்டிக்காட்டும் எந்தவிரு திட்டமும் இந்த அரசினால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அல்ல.

அனைத்தும் கடந்த கால அரசினாலும் பிரதேச சபையினாலும் முன்னெடுக்கப்பட்டு இறுதி நிலையில் இருந்த திட்டங்களை எல்லாம் உங்கள் அரசு செய்த சேவையாக கூறாவேண்டாம்.

இவ்வாறு கீழ்த்தரமான அரசியல் செய்வதை நிறுத்துங்கள் எனக் கூறினார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் சில நிமிடங்கள் சபை பெரும் ரணகளமாக ஏற்பட்டது.

இன்நிலையில் தவிசாளர் உள்ளிட்ட அதிகளவான உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி அரசு சார் உறுப்பினர் சொல்வது அப்பட்டமான பொய்.

குறிகாட்டுவான் இறங்குதுறையை தவிர எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு வேலணையில் முன்னெடுக்கவில்லை. ஆனால் தாம் செய்ததுபோன்று பொய்யான விளம்பரம் செய்கின்றது.

குறிகாட்டுவான் இறங்குதுறை கூட அவர்களது நலன்சார்ந்து தான் முன்னெடுக்கப்பட்டதே தவிர எமது மக்களின் நலன் கருதுயதானதல்ல.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை  எந்தவொரு வீதி அபிவிருத்தியும் புதிதாக நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுக்கவில்லை.

அனைத்தும் கடந்த கால முன்மொழிவுகளாவும் அன்றே நிதி ஒதுக்குடு செய்யப்பட்டனாவாகவுமேஇருக்கின்றன.

குறிப்பாக தாழையடி நீர் திட்டம் துறையூர் ஐஸ் தொழிற்சாலை என்பன கடந்த அரசுகளின் காலத்தில் முன்மொழிசாவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து இறுதிக் கட்டத்தில் இருத்த திட்டங்கள்.

எனவே உரிமை கோரி தரக்குறைவான அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசு செய்யாமல் புதிய திட்டங்களை முன்மொழிந்து நிதி ஒதுக்கீடு செய்து எமது மக்களுக்கு வழங்குவதே சிறந்தது என்றும் வலியுறுத்தினர்.
இதைதடுத்து சபையில் அமைதி திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106