சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் துணைத் திணைக்களங்கள் குறித்து ஆளுநர் விசேட கருத்து!
Tuesday, June 16th, 2026
….
எதிர்காலத்தில் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு துணைத் திணைக்களங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தனித்தனியான வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் கோரப்பட வேண்டும் என வடக்கின் ஆளுநரால் அறிவுதுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும்அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சுகாதாரத் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள ஏனைய நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்திட்டங்களின் முன்னேற்றங்களும் இதன்போது இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் மற்றும் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்களும் கூட்டத்தில் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன.
இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல்), மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர், மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106