அமரர்  சந்திரராசாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 14th, 2026


…..
அமரர் செல்லையா சந்திரராசாவின் (பாலு) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கட்சியின் செயற்பாட்டாளரான அமரர் செல்லையா சந்திரராசா, சிறிதுகாலம் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 12 ஆம் நாளன்று தனது 64 ஆவது வயதில் காலமானார்.

இன்நிலையில்  வட்டுக்கோட்டை அராலியில் உள்ள அமரரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம், அமரருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

குறித்த அஞ்சலிப்பின்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலிகாமம் மேற்கு நிர்வாக செயலாளர் செல்சக்குமார் மற்றும் கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து அஞ்சலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106