பிளவுபடும் நிலையில் ரெலோ – செல்வத்தின் முடிவே தீர்மானிக்கும் என அதிருப்தி அணியினர் கருத்து

Sunday, June 14th, 2026

!
….
கட்சித் தலைமையின் பல்வேறு அதிருப்திகரமான செயற்பாடுகளாலும் கட்சியின் கொள்கைக்கு புறமான தீர்மானங்களாலும் பிளவுபடும் நிலைக்கு ரெலோ வந்துள்ளதாக கூறிய அதிருப்தி அணியினர் செல்வம் அடைக்கலநாதனின் முடிவுகளே பிளவுறுவதை நிர்ணயிக்கும் அன்றும் சுட்டிக்காட்ட்டியுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்க்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய ரெலோ கட்சியின் முக்கிய தலைவர்களான அக்கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன், தேசிய அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ் மற்றும் ஆ.புவனேஸ்வரன் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கட்சியின் தலைவர் உள்ளிட்ட பலர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர்கள் தலைவர் செல்வம் அடைக்கலனாதனின் தன்னிச்சையான சுதனல முடிவுகளே கட்சியின் இந்த இழுபறி நிலைக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக தலைவராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் பாலியல் குற்றங்களுடன் தொடர்பு பட்டதையும் அதை அவர் ஓப்புக்கொண்ட நிலையில் பதவி விலக தாம் கோரியதாகவும் ஆனாலும் அவர் தனது பதவி ஆசையால் பதவியை விட்டு ஒதுங்காது பல்வேறு குழப்பங்களையும் கட்சியின் யாப்புக்கு முரணான விரோத செயற்பாடுகளையும் செய்வதால் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியை விட்டே வெளியேறிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் சாடினர்.

இதேனேரம் கட்சியின் 12 ஆவது தேசிய மநாட்டை நடத்தும் அவரது அணியினர், 225 உறுப்பினர்ககைக் கொண்ட கட்சியின் பொதுக் குழுவில் அதிருப்தியடைந்துள்ள 125 பொதுக்குளு  உறுப்பினர்களை அழையாதே மாநாட்டை நடத்தி தமது பதவிகளை தக்கவைக்க முயற்சிக்கின்றனர்.
ஆனாலும் அந்த தெரிவுகள் அனைத்தும் சட்டவிரோதமாகவே இருக்கும் என்றும் கூறிய அவர்கள் கட்சியின் எதிர்காலம் குறிப்பாக பிளவுபடும் நிலை ஒன்று வருமாக இருந்தால் அது தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் முடிவிவிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106