நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் மாயம் – இன்னொருவர் படகுடன் மீட்பு!
Friday, June 12th, 2026நெடுந்தீவில் இருந்து நேற்றிரவு (11/06) கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் கடலில் தவறிவீழ்ந்து காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர் படகுடன் மீட்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும், நெடுந்தீவு தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் (சதீஸ் – வயது 41) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –
நேற்று இரவு 7.00 மணியளவல் நெடுந்தீவு தாளைத்துறையில் இருந்து கடற்தொழிலிற்காக வெளியிணைப்பு இயந்திரப் படகில் சென்ற இருவரில் ஒருவர் கடும் கடற் கொந்தளிப்பு காரணமாக படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டு காணாமல் போயுள்ளார்.
மற்றையவரின் தொலைபேசித் தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து படகுமூலம் சென்ற குழுவினரல் இன்று(12/06) அதிகாலை மீட்கப்பட்டு நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாவதாக தெரியவருகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106