சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்!

Friday, June 12th, 2026

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கி, சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு இன்றையதினம் நீதிமன்றில் வழங்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்குத் தொடர்பில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தனர்.

வழக்கின் நுணுக்கங்களையும், பின்னணிகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த சட்டமா அதிபர், எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காது, மிகவும் துணிச்சலான மற்றும் கௌரவமிக்க தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இளைஞன் சங்கீத்சனுக்கு எதிராகக் சுமத்தப்பட்டிருந்த கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டக் குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் முழுமையாக நீக்கியுள்ளார் என்பதோடு இந்த வழக்கினை தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் பிரிவின்கீழ் (சாதாரண சட்டப் பிரிவு) மாற்றிப் பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை மையமாக வைத்துச் சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கவும், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும் பலர் திட்டமிட்டு வந்தனர். எனினும், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, சற்றும் தாமதிக்காது சட்டமா அதிபர் எடுத்த இந்தத் தீர்க்கமான முடிவு, சமூகப் குழப்பப்க்களை தடுத்து நிறுத்தியுள்ளது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இன்னும் முழுமையாக நீக்கப்படாத ஒரு கடுமையான சூழல் நிலவும் நிலையிலும், சட்டமா அதிபர் சட்டப் புத்தகங்களை மட்டும் பார்க்காமல், பாதிக்கப்பட்ட இளைஞனின் எதிர்காலத்தையும், அவரது கலை வாழ்வையும் கருத்திற் கொண்டு இந்த உன்னத முடிவை எடுத்துள்ளார்.

சட்டத்தின் நோக்கம் தண்டனை வழங்குவது மட்டுமல்ல, நீதியை நிலைநாட்டுவதுதான் என்பதை சட்டமா அதிபரின் இந்தச் செயல் நிரூபித்துள்ளது.

இதனால் அவருக்கு பிணையும் வழங்க முடியும் என்பது முக்கிய விடயம்.

சட்டமா அதிபரின் இந்த அதிரடி மற்றும் நீதியுடனான தலையீட்டின் காரணமாக, சங்கீத்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீண்டகாலமாக இழுபறியாக இருந்த இந்த வழக்கு மிக விரைவில் முழுமையான முடிவுக்கு வந்து, அந்த இளைஞனுக்குப் பூரண நீதி கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106