போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீருக்கான புதிய கட்டுப்பாட்டு விலை!
Wednesday, June 10th, 2026
உள்நாட்டில் பொதியிடப்பட்ட அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த 96 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (வர்த்தமானி இலக்கம்: 2492/29), இன்று (10/06) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விலைக் கட்டுப்பாட்டு உத்தரவின் மூலம், 2025 ஏப்ரல் 01 ஆம் திகதியிட்ட 2430/15 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த பழைய விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு (இலக்கம் 93) இரத்தாவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
புதிய அறிவித்தலின் பிரகாரம் அதிகபட்ச சில்லறை விலைகள் பின்வருமாறு
500 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் வரை ரூ. 80.00
1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரை ரூ. 120.00
1.5 லீற்றர் முதல் 1.999 லீற்றர் வரை ரூ. 150.0
02 லீற்றர் முதல் 2.499 லீற்றர் வரை ரூ. 180.0
05 லீற்றர் முதல் 6.999 லீற்றர் வரை ரூ. 400.00
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106