‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா 84 வயதில் காலமானார்!
Wednesday, June 10th, 2026தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா 84 வயதில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் காலமானார்
பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா சாதனை, கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையினர் வேண்டுகோள் விடுத்த நிலையில் தமிழக அரசு இதனை அறிவித்துள்ளது.
மேலும் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் சூர்யா மற்றும் நடிகர் சிவகுமார் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
இதேநேரம் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை ராதிகா மற்றும் சுகன்யா உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.
அதுவரை ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.
‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தினார். அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா இன்று (10) அதிகாலையில் காலமானார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106