ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறையில் பேராபத்து – அனுர அரசு அசமந்தம் என குற்றச்சாட்டு!

Tuesday, June 9th, 2026


….
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் கூறப்படும் வாக்குறுதிகள் வெறும் அரசியலுகான வார்த்தைகளாக இருக்காது, வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நடைமுறையிலும் நிறைவுசெய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உறுப்பினர் கிருஸ்ணன் புவி
மனித உயிர்கள் பலியெடுக்கப்பட முன்னர் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்கு துறையை புனரமைத்து மக்களின் இயல்பு நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

உடைந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையின் புனரமைப்பு தாமதப்படுத்தப்படுவதால்கடற்பயணம் செய்யும் பயணிகள் தமது உயிரை கையில் பிடித்தபடியே நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக இறங்குதுறையின்  படகுகள் கரை அணைக்கும் பகுதி முழுமையாக உடைந்து விழும் நிலையில் இருக்கின்றது.

இது தொடர்பிலும், இதனால் பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் உயிர் ஆபத்க்துக்கள் குறித்தும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பலமுறை பிரஸ்திக்கப்பட்ட நிலையில் குறித்த இறங்குதுறையின் மீள் அபிவிருத்திக்கென 16 மில்லியன் ஒதுக்கப்படுவதாக இன்றைய அரசின் பிரதிநிதிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்தும் அதன் கட்டுமாணங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படாது அது அனுர அரசுசார் பிரதினிதிகளின் வெறும் அரசியல்  பேச்சாகவே இருக்கின்றது.

இதனால் மக்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது.

மாற்றம் ஒன்றே தமது கொள்கை என கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய அரசு அதனை செய்வதாக தெரியவில்லை.

ஊர்காவற்றுறை – அனலைதீவு, எழுவதீவு மக்களின் போக்குவரத்தை விரைவாக சீர்செய்வது அவசியமாகும் என்பதுடன்
ஊடகங்களில் கட்டுமாணங்களையும் அபிவிருத்தியையும் செய்வதே  அபிவிருத்தி என்றும் அவர் வலியுறுத்தினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106