கீரிமலைக் கடலில் நடைபெற்ற இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்தார்த்த நிகழ்வு!

Sunday, June 7th, 2026


..
இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்தார்த்த தினத்தை முன்னிட்டு யாழ் கீரிமலை புனித கண்டகி தீர்த்தக் கரையில் சிரார்த்த கிரியை நிகழ்வுகள்
சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றன

பராபவ வருடம் வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் மன்னனுடைய திதி தினமாகும் சங்கிலிய மன்னனுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் தர்ப்பணம் கிரியைகள் செய்து அவர்களை நினைத்து அவர்களுடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகள் நடைபெற்றன

சிரார்த்த கிரியைகள் நடைபெற்று தர்ப்பணங்கள் கீரிமலை புனித தீர்த்தத்தில் கரைக்கப்பட்டது

இரண்டாம் சங்கிலிய மன்னன் (ஒன்பதாம் செகராசசேகரன்) யாழ்ப்பாண அரசை ஆண்ட இறுதித் தமிழ் மன்னன் ஆவான்.

போத்துக்கீசிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக வீரத்துடன் போரிட்ட இவன், கி.பி. 1617 முதல் 1619 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செயத அரசன் எதிர்மன்னசிங்கம் பரராஜசேகரன் 1617 இல் மறைந்த பிறகு, ஏற்பட்ட வாரிசுப் போட்டிகளையும் உள்நாட்டுக் குழப்பங்களையும் அடக்கி சங்கிலிய மன்னன் ஆட்சியைக் கைப்பற்றினான்.

யாழ்ப்பாண மண்ணை ஆக்கிரமிக்க முயன்ற போத்துக்கீசியர்களை இறுதிவரை தீவிரமாக எதிர்த்துப் போராடினான்.

1619 இல் பிலிப் டி ஒலிவேரா (Filipe de Oliveira) தலைமையிலான போத்துக்கீசியப் படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது.

சங்கிலி மன்னன் கைது செய்யப்பட்டு, கோவாவிற்கு கொண்டு செல்லப்பட்டு 1621 இல் தூக்கிலிடப்பட்டான். இவனுடன் யாழ்ப்பாணத் தமிழ் அரசு முடிவுக்கு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106