கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2026


……
அதிகாரங்கள்  இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால்,  மக்களின் நலன்களில் பங்கெடுத்து அவர்களுக்குச் சேவை செய்வதே எமது கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிசார் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினரூடாக  தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தம்மை தயார்ப்படுத்தி உழைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்றையதினம் நடத்தியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது இவ்வாறு கூறிய அவர்
​தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவசிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தறிந்து கொண்டார்.

​மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தத்தமது, பிரதேச மற்றும் வட்டாரங்களில் உள்ள மக்களின் தேவைகளை இனம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

​கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவது மற்றும் வரவிருக்கும் காலச்சூழலுக்கு ஏற்ப  முகங்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது
முன்பதாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் பலியாகிப்போன தியாகிகளை நினைவு கூரும் வகையில் விடுதலை வித்துக்கள் தினத்தை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தி கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106