5 வருடம் கடந்த சேவையாளர் புறக்கணிப்பு – 2000 ஆண்டின் பின் பிறந்தோருக்கு 2019 ஆம் ஆண்டு சுற்று நிருபத்தின் கீழ் நேர்முக தேர்வுக்கு அழைப்பு-  சுகாதார தொண்டர்கள் நீதி கோரி போராட்டம்!

Friday, June 5th, 2026


……..
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் கோரி பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டம் ஒன்றை  முன்னெடுத்தனர்.

இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தும் எவராலும் வாக்குறுதி வழங்கப்படாத நிலையில் நிறைவுக்கு வந்தது.

குறித்த போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை சுட்டிக்காட்டி தமக்கான நியாயத்தை கோரிய போராட்டகாரர்கள் தீர்வு கிடைக்காவிடின் நாளை நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வை நடைபெறவிடாது தடுத்து போராட்டம் முன்னெடுக்கப் போவதாகவும் கூறினர்.

இதேனேரம் தாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த சேவையை நிலையான ஊதியம் கூட கிடைக்காது மேற்கொண்டு வருவதாகவும் இந்த அனுர ஆட்சியில் தாம் கொழும்பில் துறைசார் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் நியமனம் வழங்கும் போது உள்வாங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

ஆனால் இன்று அவர்களது வாக்குறுதி போலியாகிவிட்டது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதைவிட மோசடியான விடையமாக 2019 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதற்கு முந்தைய காலத்தில் 180 நாள்கள் சேவையில் இருந்திருந்தால் அவர்கள் உள்வாங்கப்படுவர் என்று கூறப்படுகின்றது.
ஆனால் 2000 ஆம் ஆண்டின் பின் பிறந்த அதிகமானோர் அதில் உள்வாங்கப்பட்டுள்ளது எந்த சுற்றுனிருபத்தின் பிரகாரம் என்று தெரியவில்லை.

இது இந்த அரசின் மோசடியாகவே இருக்கின்றது. எனவே எமக்கான நியமனம் கிடைக்கவேண்டும் அல்லது நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்றனர்.
இதே நேரம் சம்பச இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் இளங்குமரன் ஆகியோர் வருகைதந்து பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106