ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!
Friday, May 29th, 2026
………
தென்மராட்சி பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைத்து வலுவாக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல் ஒன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்தில் (28) நடைபெற்ற குறித்த கூட்டத்தின் போது சமகால அரசியல் நிலைமைகள், மக்களின் வாழ்வியல் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
விசேடமாக நடந்துமுடிந்த நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னரான கட்சியின் முன்நகர்வுகளில் இருக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதனை வெற்றிகரமாக முன்னகர்த்தும் பொறிமுறைகள் குறித்தும் செயலாளர் நாயகத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் வட்டாரக் கட்டமைப்பை மேலும் வலுவாக்கி அதனூடாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் செயற்பாடுகள் சென்றடைய வேண்டியதன் அவசியத்தையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தியிருந்தார் .
குறித்த கூட்டத்தின்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சிரேஸ்ட முக்கியஸ்தர் விந்தன் தென்மராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ, உதவி நிர்வாக செயலாளர் தர்சன் மற்றும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106