அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!
Friday, May 22nd, 2026நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இக்கூட்டம் நேற்று (22) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் சட்ட ரீதியான தடைகளை விவரிக்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது
Related posts:
ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களம்!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் - 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு ச...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!
|
|
|
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி - சுகாதார அதிகாரிகள் சுட்...
கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- வர்த்தக மற்றும் உணவு பாதுகா...
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆர...


