ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைத் திணைக்களம்!
Tuesday, March 31st, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Related posts:
கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால...
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவ...
|
|
|


