தோழர் குகனின் தாயாரது இறுதி ஆராதனையில் பங்கேற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, May 20th, 2026


……
தோழர் குகனின் தாயார்
விஜயரட்ணம் பேளின் மரினாவின் (ரஜனி அம்மா)
பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லுர் பிரதேச செயற்பாட்டாளரான தோழர் குகன் அவர்களின் தாயாரான
அமரர் விஜயரெட்ணம் பேளின் மரினா
வயதுமூப்பின் காரணமாக நேற்றையதினம் (19) காலமானார்.

இந்நிலையில் அமரரது பூதவுடல் மணியம்தோட்டத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலியை தெரிவித்தார்.

அத்துடன் அமரரது பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு தனது ஆறுதலையும்  அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

மேலும் மணியம்தோட்டம் கர்த்தர் மாதா தேவாலயத்தில் நடைபெற்ற இறுதி ஆராதனையிலும் பங்கேற்றதுடன்
குருநகர் சேமக்காலையில் நடைபெற்ற நல்லடக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த இறுதி அஞ்சலியின்போது செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்,  வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன்,  சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோருடன் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106