தடைப்படும் நிலையில்நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை!
Monday, May 18th, 2026
…..
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சீரான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த இரண்டு தனியார் படகுகளும் பழுதடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
நேற்று (17/05) முதல் கரிகணன் படகு பழுதடைந்ததினால், மற்றைய தனியார் படகு காலை மற்றும் மாலை பயணிகள் சேவையை சீராக வழங்கி வந்தது.
இந்த நிலையில் குறித்த தனியார் படகினுள் இன்று (18/05) மாலைநேர சேவையின் போது நீர் கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாளை (19/05) காலை நேர பயணிகள் படகுசேவை இடம்பெறுமா என்பது கேள்வியாகியுள்ளது.
இதேவேளை நேற்று (17) தொடக்கம் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 03 படகுகளும் திருத்த வேலைகளுக்கான தீவைவிட்டு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இரு தனியார் படகுகளே சீரான சேவையினை செய்து வருகின்றன.
இது விடயமாக உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106