இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு – 4 விசேட மருத்துவ நிபுணர்களே உள்ளதாக சுட்டிக்காட்டு!
Monday, May 18th, 2026
மஹரகம புற்றுநோயியல் மருத்துவமனையின் இரத்தப் புற்றுநோய் பிரிவின் தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாகப் பதிவாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது இரத்தப் புற்றுநோயுடன் வாழும் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 15,000 முதல் 18,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகளவிலான நோயாளிகள் காணப்பட்ட போதிலும், இத்துறையில் விசேட வைத்திய நிபுணர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர் சோமவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த இரத்தப் புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பதற்காக நாடு முழுவதும் வெறும் நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் மாத்திரமே பணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106